இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சனத் ஜயசூரிய நியமனம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
DEC
15

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சனத் ஜயசூரிய நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சனத் ஜயசூரிய நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அதற்கமைய, இலங்கை கிரிக்கெட் உயர் தொழில்நுட்ப மத்திய நிலையத்தின் கீழ் உள்ள அனைத்து அணிகளையும் சனத் ஜயசூரிய மேற்பார்வை செய்வார்.

 

சனத் ஜயசூரிய இதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவின் தலைவராகவும் தேசிய தெரிவுக்குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

 

110 டெஸ்ட் போட்டிகள், 445 ஒருநாள் போட்டிகள் ,31 T20I போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், கிரிக்கெட் களத்தில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

 

1996 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சனத் ஜயசூரிய தொடர் நாயகன் விருதையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

views

69 Views

Comments

arrow-up