இந்திய கிரிகெட் சபையுடன் கலந்தாலோசித்த ரணில்!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
18

இந்திய கிரிகெட் சபையுடன் கலந்தாலோசித்த ரணில்!

இந்திய கிரிகெட் சபையுடன் கலந்தாலோசித்த ரணில்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கிரிக்கெட் நெருக்கடி தொடர்பில் இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷாவுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

 

நேற்றைய நாடளுமன்ற அமர்வின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.

 

இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷாவின் தந்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வலது கரம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

இதற்கு பதிலளித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி கிரிக்கெட் பிரச்சனையை அரசியல் பிரச்சனையாக்க முயற்சிக்கிக்க கூடாதென கூறியுள்ளார்.

 

அத்துடன், சர்வதேச கிரிக்கெட் பேரவையால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு முழு நாடாளுமன்றமும் ஒன்றிணைய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சர்வதேச கிரிக்கெட் பேரவையால் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிப்பது சிறந்தது என பலர் தெரிவித்தாலும் அது அடுத்த தலைமுறையினரை பாரியளவில் பாதிக்குமென கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 

கிரிக்கெட் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்க யாரும் முயற்சிக்க கூடாதென அவர் மேலும் கூறியுள்ளார்.

 

இதேவேளை, கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக பிரச்சனைகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையை குற்றம் சாட்ட முடியாதெனவும் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

views

104 Views

Comments

arrow-up