மித்தெனிய முக்கொலை - மற்றுமொரு சந்தேகநபர் கைது

மித்தெனிய முக்கொலை சம்பவம் தொடர்பில் வீரக்கெட்டிய வக்கமுல்ல பகுதியில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை பிராந்திய குற்ற விசாரணை அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹக்குருவெல பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 18ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அருண விதானகமகே என்பவரும் அவரது இரு பிள்ளைகளும் உயிரிழந்தனர்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
62 Views
Comments