தங்காலை மித்தெனியவில் துப்பாக்கிச்சூடு ; தந்தையும் மகளும் பலி
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
FEB
20

தங்காலை மித்தெனியவில் துப்பாக்கிச்சூடு ; தந்தையும் மகளும் பலி

தங்காலை மித்தெனியவில் துப்பாக்கிச்சூடு ; தந்தையும் மகளும் பலி

 தங்காலை மித்தெனிய கடேவத்த சந்தியில் அடையாளம் தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தந்தையும் மகளும் கொல்லப்பட்டனர்.

 

குறித்த நபர் தனது மகள் மற்றும் மகனுடன் 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத சிலரால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

39 வயதான தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

காயமடைந்த அவரது மகள், தங்காலை வைத்தியசாலையிலும் மகன் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

 

எவ்வாறாயினும், 6 வயதான மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 

T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

views

61 Views

Comments

arrow-up