காலஞ்சென்ற இலியாஸுக்கு பதிலாக வேறொரு வேட்பாளரை முன்நிறுத்த சந்தர்ப்பம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
AUG
24

காலஞ்சென்ற இலியாஸுக்கு பதிலாக வேறொரு வேட்பாளரை முன்நிறுத்த சந்தர்ப்பம்

காலஞ்சென்ற இலியாஸுக்கு பதிலாக வேறொரு வேட்பாளரை முன்நிறுத்த சந்தர்ப்பம்

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவிருந்த நிலையில் மரணித்த டொக்டர் ஹைதுருஸ் மொஹம்மட் இலியாஸுக்கு பதிலாக வேறொரு
வேட்பாளரை முன்நிறுத்த சந்தர்ப்பம் உள்ளதென தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

டொக்டர் ஹைதுருஸ் மொஹம்மட் இலியாஸின் மரணச் சான்றிதழை சமர்ப்பிப்பதன் மூலம் இலியாஸ் சார்பில் வேட்பு மனுவில் கையொப்பமிட்டவருக்கு வேறொரு வேட்பாளரை பரிந்துரைக்க முடியும் என ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க கூறியுள்ளார்.

 

இதற்கு 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

எவ்வாறாயினும்,  வாக்குச் சீட்டில், மொஹம்மட் இலியாஸின் வாக்காளர் சின்னமும் பெயரும் அச்சிடப்பட்டுள்ளதால் அவற்றில் மாற்றங்கள் ஏதும் இடம்பெற மாட்டாது என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தவசாளர்  தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை சுயாதீன வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த புத்தளத்தைச் சேர்ந்த டொக்டர் ஹைதுருஸ் மொஹம்மட் இலியாஸ் நேற்றுமுன்தினம்(22) காலமானார்.

 

மாரடைப்பால் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் தனது 79 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

views

146 Views

Comments

arrow-up