தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 437 முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 14 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 7 முறைப்பாடுகளும் வன்முறை சம்பவங்கள் குறித்து 7 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் 03 முறைப்பாடுகள் கிடைத்ததாக தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
சட்டவிரோத பிரசார செயற்பாடுகள் தொடர்பில் குறித்த முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரை மொத்தமாக 437 முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
193 Views
Comments