பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான அறிவித்தல்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
21

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான அறிவித்தல்

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான அறிவித்தல்

கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துள்ளது.

 

இந்த காலப்பகுதிக்குள் சுமார் 40,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

அதனடிப்படையில் அனைத்து மருத்துவ பீடங்கள் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் ஆகியவற்றுக்கு பதிவு ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

இந்த ஆண்டு 43,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

 

இவற்றில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யாத மாணவர்களுக்கு பதிலாக வேறு மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

views

87 Views

Comments

arrow-up