தங்க விலையில் திடீர் மாற்றம் : நகை வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக உயர்வடைந்த தங்க விலை இன்று சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அந்தவகையில், இன்றைய (01.11.2024) நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 807,890 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 28,500 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 228,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 26,130 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 209,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,940 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) 199,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 220,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று (22 karat gold 8 grams) 203,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
131 Views
Comments