ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரிக்கக்கோரி மனு தாக்கல்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
26

ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரிக்கக்கோரி மனு தாக்கல்

ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரிக்கக்கோரி மனு தாக்கல்

ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி சார்பில் கம்பஹா மாவட்டத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

கம்பஹா மாவட்ட சுயேச்சை வேட்பாளர் K.M மஹிந்த சேனாநாயக்க இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

 

ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்ற ஆசனத்தை பெற்றுக்கொள்ளவும் வாக்களிக்கவும் தகுதியற்றவரென  உத்தரவிடுமாறு குறித்த மனு கோரப்பட்டுள்ளது.

 

மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல் ஆணைக்குழு,  தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் கம்பஹா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி உள்ளிட்டவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். 

views

131 Views

Comments

arrow-up