ரயில் நிலைய அதிபர்கள் திடீர் வேலைநிறுத்தம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
30

ரயில் நிலைய அதிபர்கள் திடீர் வேலைநிறுத்தம்

ரயில் நிலைய அதிபர்கள் திடீர் வேலைநிறுத்தம்

 ரயில் நிலைய அதிபர்கள் திடீர் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

 

பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சில சிக்கல்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு கோரி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பில் போக்குவரத்து அதிகாரிகளுடன் இன்று(30) நடைபெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

 

இந்த திடீர் வேலைநிறுத்தம் காரணமாக ரயில் பயணிகள் கடும் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர்.

views

110 Views

Comments

arrow-up