இந்திய மீன்பிடிப் படகு மோதி கடற்படை வீரர் உயிரிழப்பு: கொலையாகக் கருதி விசாரணை

இந்திய மீன்பிடிப் படகு மோதி கடற்படை உறுப்பினர் உயிரிழந்ததை கொலையாகக் கருதி விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடிப் படகில் இருந்தவர்களை கைது செய்ய முற்பட்ட போது கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார்.
கடற்படை படகில் இருந்து இந்திய மீனவர்களின் படகிற்கு செல்ல முயற்சித்தபோது, இந்திய மீன்பிடிப் படகு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செலுத்தப்பட்டதால் ஏற்பட்ட விபத்திலேயே குறித்த கடற்படை உறுப்பினர் உயிரிழந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையின் விசேட படகுகள் அணியின் உறுப்பினராக கடமையாற்றி வந்த 41 வயதான பிரியந்த ரத்நாயக்க எனபவரே இந்த சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளார்.
197 Views
Comments