உள்ளூராட்சி மன்ற தேர்தலுடன் தொடர்புடைய 413 முறைப்பாடுகள் பதிவு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
04

உள்ளூராட்சி மன்ற தேர்தலுடன் தொடர்புடைய 413 முறைப்பாடுகள் பதிவு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுடன் தொடர்புடைய 413 முறைப்பாடுகள் பதிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய 413 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளாதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 20ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இவற்றுள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 382 முறைப்பாடுகளும் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 3 முறைப்பாடுகளும் அடங்குகின்றன.

இதனிடையே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்கான அரச அதிகாரிகளின் தகவல் கணக்கெடுப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

views

39 Views

Comments

arrow-up