ஜனாதிபதித் தேர்தலுக்கான 51 வீத வாக்காளர் அட்டைகள் பகிர்ந்தளிப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
09

ஜனாதிபதித் தேர்தலுக்கான 51 வீத வாக்காளர் அட்டைகள் பகிர்ந்தளிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான 51 வீத வாக்காளர் அட்டைகள் பகிர்ந்தளிப்பு

51 வீதமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

நேற்று(08) 33 இலட்சத்திற்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் பீ சத்குமார குறிப்பிட்டுள்ளார்.



இதற்கமைய இதுவரை 87 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. 



ஏனைய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள், எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தபால் ஊழியர்களின் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளன. 



எதிர்வரும் 14ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் இருந்தால், தமக்கு கடிதங்களை விநியோகிக்கும் அலுவலகத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தபால் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

views

173 Views

Comments

arrow-up