பஸ் கட்டணங்களில் திருத்தமில்லை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
02

பஸ் கட்டணங்களில் திருத்தமில்லை

பஸ் கட்டணங்களில் திருத்தமில்லை

பஸ் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

04 வீதத்தை விட அதிக அளவில் எரிபொருள் விலைகள் குறைக்கப்படாததால் பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷீ வெல்கம தெரிவித்துள்ளார்.

 

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் நேற்றுமுன்தினம்(31) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளை குறைத்தன.

 

ஒட்டோ டீசல் லீட்டரொன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டது.

views

170 Views

Comments

arrow-up