JUL
11
சுற்றுலா பஸ் விபத்திற்குள்ளானதில் 25 பேர் காயம்

நுவரெலியா - டொப்பாஸ்(Toppass) பிரதேசத்தில் இன்று(11) அதிகாலை பஸ்ஸொன்று விபத்திற்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி பயணித்த இந்த பஸ்ஸில் சுற்றுலா சென்ற சிலரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
199 Views
Comments