மாதம்பை விபத்தில் காயமடைந்தவர்களில் மூவர் உயிரிழப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
05

மாதம்பை விபத்தில் காயமடைந்தவர்களில் மூவர் உயிரிழப்பு

மாதம்பை விபத்தில் காயமடைந்தவர்களில் மூவர் உயிரிழப்பு

மாதம்பை - இரட்டைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

 

உயிரிழந்தவர்களில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

விபத்தில் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயதான மூதாட்டியும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவரும் உயிரிழந்தனர்.

 

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் மாதம்பை - இரட்டைக்குளம் பகுதியில் நேற்று(04) முற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் 26 பேர் காயமடைந்தனர்.

 

கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் எதிரில் வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கது. 

views

213 Views

Comments

arrow-up