AUG
26
நாடளாவிய ரீதியில் 32 நெற்களஞ்சியசாலைகளை திறக்க திட்டம்

நாடு முழுவதும் 32 நெற்களஞ்சியசாலைகளை திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சிறுபோகத்தில் நெல்லுக்கான கொள்வனவு விலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் கட்டத்தின் கீழ் நெல் கொள்வனவிற்காக நிதி அமைச்சினால் 500 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய 5000 மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.
159 Views
Comments