உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025 - தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
25

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025 - தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025 - தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு இன்றும்(25) இடம்பெறவுள்ளது.

 

இதற்காக நிறுவப்பட்டுள்ள வாக்களிப்பு மத்திய நிலையங்களில் காலை 8.30 முதல் மாலை 4.15 வரை வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

நேற்று(24) ஆரம்பமான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

அரச நிறுவனங்கள், பொலிஸார், முப்படையினர், பாடசாலைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் தபால்மூல விண்ணப்பதாரர்களும் இந்நாட்களில் வாக்களிக்க முடியும்.

 

இதனிடையே, ஸ்ரீ தலதா காட்சிப்படுத்தலை முன்னிட்டு விசேட கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக விசேட தபால் வாக்களிப்பு மத்திய நிலையம் கண்டியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

views

87 Views

Comments

arrow-up