காலநிலை மாற்றத்தின் எதிரொலி - உச்சம் தொட்ட தேங்காய் விலை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
20

காலநிலை மாற்றத்தின் எதிரொலி - உச்சம் தொட்ட தேங்காய் விலை

காலநிலை மாற்றத்தின் எதிரொலி - உச்சம் தொட்ட தேங்காய் விலை

மட்டக்களப்பு பகுதியில் காலநிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால் தேங்காய் விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடரும் உஷ்னமான கால நிலையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

நகரில் முக்கிய தேவைகளுக்காக வரும் மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

அதிக உஷ்ணம் காரணமாக வயோதிபர்கள் நோயாளிகள் பெண்கள் சிறுவர்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மர நிழல்களில் ஒதுங்கி இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

 

சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கமைய பொதுமக்கள் நண்பகல் வேலைகளில் வழியில் நடமாட வேண்டாமென தெரிவித்திருந்த போதும் அதிகமான மக்கள் நகரில் தங்களது தேவைகள் நிமித்தம் வருகை தந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

 

தற்போது மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்ணமான காலநிலையினால் விவசாய நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளது. இதேவேளை மாவட்டத்தில் பயன்தரும் வாழை, மா,தெங்கு பயிர்ச் செய்கையும் அதிக உஷ்ணம் காரணமாக பாதிப்படைந்துள்ளது.

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தென்னை மரங்களின் இலைகள் கருகுவதுடன் அதன் விளைச்சலும் பாதிப்படைந்துள்ளது. இதனால் தேங்காயின் விலைகளும் அதிகரித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

views

14 Views

Comments

arrow-up