PhonePe - LankaPay இடையில் உடன்படிக்கை கைச்சாத்து

சுற்றுலா அல்லது தொழில் நிமித்தம் நாட்டிற்கு வருகை தரும் இந்தியர்களுக்காக இந்திய ரூபாவில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கான வசதியை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில், இந்தியாவின் PhonePe நிறுவனத்திற்கும் இலங்கையின் LankaPay நிறுவனத்திற்கும் இடையில் உடன்படிக்கையொன்று நேற்று (15) கைச்சாத்திடப்பட்டது.
இந்திய தேசிய கொடுப்பனவு கூட்டுத்தாபனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய கையடக்கத்தொலைபேசி செயலியான UPI ஊடாக வங்கிக் கணக்குகளுக்கு பணப்பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதனை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில், LankaQR கட்டமைப்பினூடாக PhonePe செயலியை பயன்படுத்தி கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கான உடன்படிக்கை நேற்று (15) கைச்சாத்திடப்பட்டது.
209 Views
Comments