ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
AUG
07

ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதியின் யோசனைக்கு அமைவாக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வௌியாகியுள்ளது.

 

மின் விநியோகம், பெற்றோலிய உற்பத்தி, எரிபொருள் விநியோகம் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்த வர்த்தமானிக்கு அமைவாக எந்தவொரு அரச கூட்டுத்தாபனம், அரச திணைக்களம், உள்ளூராட்சி மன்றம்,  கூட்டுறவுச் சங்கம் அல்லது அவற்றின் கிளை மூலம் வழங்கப்படும் சேவைகள் சாதாரண மக்களின் அன்றாட வாழ்விற்கான அத்தியாவசிய சேவைகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

views

191 Views

Comments

arrow-up