கடலுக்கு செல்ல வேண்டாம் - கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
25

கடலுக்கு செல்ல வேண்டாம் - கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

கடலுக்கு செல்ல வேண்டாம் - கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

மறு அறிவித்தல் வரை அரபிக்கடல் பிராந்தியத்திற்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கும் கடல்சார் ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழையின் தீவிரம் காரணமாக அரபிக்கடற்பரப்பில் பலத்த காற்று வீசுவதுடன், கடற்பிராந்தியம் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 

இதனால் குறித்த கடற்பிரதேசங்களில் தற்போது மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களை உடனடியாக கரை திரும்புமாறும் அல்லது பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

சில பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 

அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
 

views

207 Views

Comments

arrow-up