இந்திய அரசாங்கத்தால் யாழ்.மாவட்டத்திற்கு மழைநீர் சேகரிப்பு தாங்கிகள்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
03

இந்திய அரசாங்கத்தால் யாழ்.மாவட்டத்திற்கு மழைநீர் சேகரிப்பு தாங்கிகள்

இந்திய அரசாங்கத்தால் யாழ்.மாவட்டத்திற்கு மழைநீர் சேகரிப்பு தாங்கிகள்

இந்திய அரசாங்கத்தால் யாழ்.மாவட்டத்தில் 934 மழைநீர் சேகரிப்பு தாங்கிகளை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

 

இது தொடர்பில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

 

யாழ்.மாவட்டத்தில் தூய்மையான குடிநீரை விநியோகிப்பதற்காக 3000 மழைநீர் சேகரிப்பு தாங்கிகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக 2016ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

 

இந்த திட்டத்தை 3 வருடங்களுக்குள் பூர்த்திசெய்ய திட்டமிடப்பட்டிருந்தாலும் நிதி மற்றும் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகளால் இவ்வருடம் ஜூன் மாதம் வரைக்கும் கருத்திட்டக் காலத்தை நீடிப்பதற்கு 2022ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. 

 

இந்தநிலையில், இந்த திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள நிதியைப் பயன்படுத்தி 934 மழைநீர் சேகரிப்பு தாங்கிகளை அமைப்பதற்காக தற்போது அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

views

198 Views

Comments

arrow-up