மினுவாங்கொடை கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
21

மினுவாங்கொடை கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது

மினுவாங்கொடை கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது

மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கொள்ளையிடப்பட்ட பணத்தில் 3 கோடியே 15 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

சம்பவத்துடன் தொடர்புயை பிரதான சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் வேனின் சாரதியே இந்தக் கொள்ளைச் சம்பவத்தை வழிநடத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

82 இலட்சம் ரூபா பணம் வேனிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

7 கோடியே 95 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம் இதன்போது கொள்ளையிடப்பட்டுள்ளது.

 

சந்தேகநபர் குறித்த வாகனத்தை கம்பஹா உக்கல்பொட பகுதியில் கைவிட்டுச்சென்ற நிலையில் நேற்று முன்தினம்(18) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 8 விசாரணைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் உள்ள பாதுகாப்பு கமராக்களின் ஊடாக கொள்ளையர்கள் தப்பிச்சென்ற பகுதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

 

பணத்தைக் கொள்ளையிட்டு தப்பிச்சென்ற சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்திருந்தால் அது தொடர்பில் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

அதற்கமைய கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் 0718591608 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் 0718591610 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்களை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

views

98 Views

Comments

arrow-up