பதுளை - எல்ல வெல்லவாய வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

மண் சரிவு அபாயம் காரணமாக பதுளை - எல்ல வெல்லவாய வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த வீதி நாளை (17) காலை 6 மணி வரை முழுமையாக மூடப்பட்டிருக்கும் என இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கற்பாறைகள் சரிதல் மற்றும் மண்சரிவு அபாயத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
265 Views
Comments