அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு வாழ்த்து
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
27

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு  வாழ்த்து  தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில்  அவர் தனது வாழ்த்துச் செய்தியினை பதிவு செய்துள்ளார்.  

சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தலின் மூலம் இலங்கை மக்கள் தமது ஜனாதிபதியை தெரிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார்.

இந்து-பசுபிக் பிராந்தியத்தின்  அமைதி, பாதுகாப்பு, செழுமையை மேம்படுத்துவதற்காக தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி தனது  எக்ஸ் தள பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

views

139 Views

Comments

arrow-up