தேர்தல் கடமையிலிருந்து நீக்கப்பட்ட 9 அரச அதிகாரிகள்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 09 அரச அதிகாரிகளுக்கு தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளை ஊக்குவித்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்தமையே இதற்குக் காரணம்.
அவர்களில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களும் அடங்குவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி எம்.பி சுமணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் 10 அரச அதிகாரிகள் குறித்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் எவருக்கும் விசேட கவனம் செலுத்தாமல் நடுநிலையுடன் செயற்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
165 Views
Comments