AUG
13
சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கும் உடன்படிக்கையில் மனிதநேய மக்கள் கூட்டணி கைச்சாத்து

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவுடன் பிரபா கணேசன் தலைமையிலான மனிதநேய மக்கள் கூட்டணி புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு கொழும்பில் இன்று(13) நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கூட்டணியில் பதிவு செய்யப்பட்ட 3 கட்சிகள், பதிவு செய்யப்படாத கட்சிகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட 27 அமைப்புகளின் தலைவர்கள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
184 Views
Comments