அமரர் இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு பெருந்திரளானோர் அஞ்சலி
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
02

அமரர் இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு பெருந்திரளானோர் அஞ்சலி

அமரர் இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு பெருந்திரளானோர் அஞ்சலி

காலஞ்சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக இன்று(02) கொழும்பு - பொரளையிலுள்ள தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது

 

அன்னாரின் பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், கட்சி உறுப்பினர்கள் என பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

அன்னாரின் பூதவுடன் நாளை(03) பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அறிக்கையொன்றினூடாக அறிவித்துள்ளனர்.

 

பின்னர் எதிர்வரும் வௌ்ளிக்கிழமையிலிருந்து திருகோணமலையிலுள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு எதிர்வரும் 7ஆம் திகதி இறுதிக்கிரியைகள் முன்னெடுக்கப்படும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று முன்தினம்(30)  காலமானார்.

 

உடல் நலக்குறைவால் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே 91 ஆவது வயதில் அவர் இயற்கை எய்தினார்.

views

189 Views

Comments

arrow-up