காலஞ்சென்ற இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு பாராளுமன்றில் இறுதி அஞ்சலி
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
03

காலஞ்சென்ற இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு பாராளுமன்றில் இறுதி அஞ்சலி

காலஞ்சென்ற இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு பாராளுமன்றில் இறுதி அஞ்சலி

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று(03) பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

 

இதன்போது சபாநாயகர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வௌிநாட்டு தூதுவர்கள், பாராளுமன்ற அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். 

 

மாலை 4 மணி வரை அன்னாரின் பூதவுடல் பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. 

 

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் இன்று மதியம் வரை பொரளையில் உள்ள தனியார் மலர்ச்சாலையொன்றில் மக்கள் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டிருந்தது. 

 

கொழும்பு பேராயர், பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் இதன்போது இறுதி அஞ்சலி செலுத்தினர். 

 

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் நாளை(04) யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. 

 

நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

views

194 Views

Comments

arrow-up