மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களில் முறைகேடு

இலங்கைக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 1000 இற்கும் மேற்பட்ட உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசேட கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் தகுதியுடைய பலருக்கு அனுமதிப்பத்திரம் கிடைக்கவில்லை என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்ரமரத்ன தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டம் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை தற்போது பாராளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த அறிக்கை கூடிய விரைவில் சபையில் சமர்பிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
117 Views
Comments