FEB
02
அதானி குழுமத்தின் மீது நிதி மோசடி குற்றச்சாட்டு!

அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைந்துள்ளது.
குறித்த குழுமத்தின் மீதான நிதி மோசடி குற்றச்சாட்டுகளே இதற்குக் காரணமாகும்.
கடந்த வாரம் ஓர் ஆய்வு நிறுவனம், சந்தேகத்திற்குரிய கணக்கு மோசடி மற்றும் பணமோசடி குறித்த விவரங்களை வெளிப்படுத்தியதை அடுத்து, அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு சரிந்தது.
குறித்த நிதி மோசடி குற்றச்சாட்டுகள் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் தனிப்பட்ட சொத்துக்களையும் பாதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகள் வெளியான சில நாட்களிலேயே அவர் உலக செல்வந்தர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து பதின்மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
499 Views
Comments