தென்னாப்பிரிக்காவுக்கு 301 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 301 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 300 ஓட்டங்கள் எடுத்தது.
அவிஷ்க பெர்னாண்டோ தனது மூன்றாவது ஒருநாள் சதத்தை 118 ஓட்டங்களுடன் அடித்தார்.
மினோத் பானுக 27 ஓட்டங்கள் எடுத்தார். தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களும் சரித் அசலங்க 72 ஓட்டங்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் காகிசோ ரபாடா மற்றும் கேசவ் மகராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
177 Views
Comments