அரச நிறுவனங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்

அரச நிறுவனங்கள் சிலவற்றுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், திறைசேரியின் உயர்மட்ட முகாமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு புதிய அதிகாரிகளை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மத்திய கலாசார நிதியத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி T.M.J.நிலான் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அதன் தவிசாளராக கலாநிதி பந்துர திலீப விதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் Y.R.சேரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
114 Views
Comments