அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் - பிரதமர் தெரிவிப்பு

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பொறுப்பற்ற கூற்றுகள் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ஜனநாயக ஆட்சியில் சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
செப்டம்பர் - ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளுமெனவும், இதனை அரசாங்கமும் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பொறுப்பற்ற வகையில் தெரிவிக்கப்படும் கருத்துகள், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலந்துரையாடப்படாத விடங்களை முன்வைத்து, நாட்டில் குழப்பமான நிலையை தோற்றுவிக்கின்றமையானது, ஜனநாயக நாட்டிற்கு ஏற்புடையது அல்ல என பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
193 Views
Comments