லிட்ரோ கேஸ் நிறுவனம் மீது நுகர்வோர் விவகார ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
17

லிட்ரோ கேஸ் நிறுவனம் மீது நுகர்வோர் விவகார ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு

லிட்ரோ கேஸ் நிறுவனம் மீது நுகர்வோர் விவகார ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு

நுகர்வோர் விவகார ஆணைக்குழு லிட்ரோ கேஸ்  நிறுவனத்துக்கு எதிராக மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

 

அது சமீபத்தில் கொம்பனி வீதி பகுதியில் ஒரு கடையில் நடத்தப்பட்ட சோதனையில் 12.5 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டருக்கு பதிலாக 18 லிட்டர் என குறிப்பிடப்பட்ட எரிவாயு சிலிண்டரின் விற்பனை தொடர்பாக ஆகும்.

 

வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துதல், விற்பனை  செய்தல், விநியோகித்தல் காரணமாக குறித்த நிறுவனம் மற்றும் அவற்றை விற்ற கடை உரிமையாளர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

1493 ரூபாய்க்கு விற்கப்பட்ட 12.55 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரை லிட்ரோ கேஸ் நிறுவனம் 98 ரூபாய்களால் குறைக்கப்பட்டு 18 லிட்டர் கேஸ் சிலிண்டரை 1395 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தியது.

 

எரிவாயு சிலிண்டர் தேவையான எடை இல்லை என்று நுகர்வோர் புகார் அளித்துள்ளனர்.

 

அதன்படி, 18 லிட்டர் எரிவாயு சிலிண்டரை சந்தையில் இருந்து அகற்றி, பழைய 12.5 கிலோ சிலிண்டரை வெளியிடுமாறு நுகர்வோர் விவகார ஆணைக்குழு நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

 

இருப்பினும், நிறுவனம் இன்னும்  அவ்வறிவுறுத்தலை பின்பற்றவில்லை மற்றும் தற்போது சந்தையில் உள்ள 18 லிட்டர் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே  காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

source:hirunews

views

224 Views

Comments

arrow-up