32 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
27

32 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன

32 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன

32 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுகத்திலுள்ள களஞ்சியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் கொள்கலன்களில் அடைத்து இந்த சட்டவிரோத சிகரெட்டுகள்

கொண்டுவரப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து குறித்த சட்டவிரோத சிகரெட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

420,000 சிகரெட்டுகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

views

78 Views

Comments

arrow-up