முதியோர் கொடுப்பனவு - பயனாளர்களின் எண்ணிக்கை 10 இலட்சம் வரை அதிகரிப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
30

முதியோர் கொடுப்பனவு - பயனாளர்களின் எண்ணிக்கை 10 இலட்சம் வரை அதிகரிப்பு

முதியோர் கொடுப்பனவு - பயனாளர்களின் எண்ணிக்கை 10 இலட்சம் வரை அதிகரிப்பு

முதியோருக்கான கொடுப்பனவு பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

குறித்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் பயனாளர்களின் எண்ணிக்கையை 10 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதியமைச்சர் வசந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

இதனூடாக சுமார் 08 இலட்சம் பேருக்கு இதுவரையில் வழங்கப்பட்ட 3,000 ரூபா முதியோர் கொடுப்பனவு 5,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

அத்துடன் முதியோர் கொடுப்பனவு பெறுவோரின் எண்ணிக்கையை 10 இலட்சமாக அதிகரிப்பதற்கும் அமைச்சு தீர்மானித்துள்ளதாக பிரதியமைச்சர் வசந்த ஜயதிஸ்ஸ கூறினார்.

views

31 Views

Comments

arrow-up