ஐக்கிய அரபு இராச்சிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 இலங்கையர்களுக்கு அரச பொது மன்னிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பல்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 இலங்கையர்களுக்கு அரச பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ரமழான் மாதத்தை முன்னிட்டு இலங்கை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக ஐக்கிய அரபு இராச்சிய வௌிவிவகார அமைச்சின் ஊடாக அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது மன்னிப்பு பெற்றுள்ள 44 இலங்கையர்களும் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக அவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அதிகாரிகளுக்கும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் இடையில் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன.
220 Views
Comments