மருந்து பற்றாக்குறையால் கோவிட் தொற்றாளர்கள் ஆபத்தில் உள்ளனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
AUG
24

மருந்து பற்றாக்குறையால் கோவிட் தொற்றாளர்கள் ஆபத்தில் உள்ளனர்

மருந்து பற்றாக்குறையால் கோவிட் தொற்றாளர்கள் ஆபத்தில் உள்ளனர்

மயக்க மருந்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பல அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊவா மாகாண தலைவர் வைத்தியர் பாலித ராஜபக்ச கூறியுள்ளார்.

 

பதுளை மாகாண பொது மருத்துவமனையில் இந்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பது தெரியவந்து  நடத்தப்பட்ட விசாரணையின் போது நாட்டிலுள்ள மற்ற மருத்துவமனைகளிலும் மத்திய மருந்தகங்களிலும் அதே மருந்துகளின் பற்றாக்குறை இருப்பது தெரியவந்துள்ளதாக ஊடகங்களிடம் பேசிய பாலித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

கோவிட் நோய்த்தொற்று தீவிரமான நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் தொடர்புடைய மருந்துகளும் அவசியமானவை என்பதால், அவற்றின் பற்றாக்குறையின் மூலம் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான ஆபத்தில் இருப்பதையும் மருத்துவர் சுட்டிக்காட்டினார்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

source:hirunews

views

113 Views

Comments

arrow-up