மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான தடையுத்தரவு ஜூன் 12 வரை நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக பதவி வகிப்பதை தடுத்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பிற்கமைய, மைத்திரிபால சிறிசேன, கட்சியின் தவிசாளராக செயற்படுவதற்கு எவ்வித சட்டரீதியான உரிமையும் காணப்படவில்லை என அவர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அவர் அந்த பதவியை வகிப்பதை தடுத்து உத்தரவு பிறப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தமது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
212 Views
Comments