சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச்சூடு

மன்னார் - பள்ளமடு பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிஸாரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அதிகாலை பொலிஸாரால் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்தமையால் டிப்பரின் டயர்களுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த டிப்பரிலிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிலர் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
தப்பிச்சென்றவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
15 Views
Comments