80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு - சுகாதார அமைச்சு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
06

80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு - சுகாதார அமைச்சு

80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு - சுகாதார அமைச்சு

நாட்டில் தொடர்ந்தும் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

குறித்த மருந்துகளை வைத்தியசாலை மட்டத்தில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

 

அதற்கமைய சிக்கல்கள் இன்றி சிகிச்சைகளை முன்னெடுத்துச்செல்ல முடியும் என அவர் கூறினார்.

 

இதனிடையே, மருந்து பற்றாக்குறை தொடர்பில் பிரதமர், கலாநிதி ஹரினி அமரசூரிய பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகாரிகளிடம் வினவியுள்ளதுடன், நோயாளர்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித சிக்கல்களும் ஏற்படாத வகையில் அந்த நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

views

111 Views

Comments

arrow-up