''அவளின் பயணத்திற்கு உதவுவோம்'' - பெண் வேட்பாளர்களுக்கான வேலைத்திட்டம் ஆரம்பம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
30

''அவளின் பயணத்திற்கு உதவுவோம்'' - பெண் வேட்பாளர்களுக்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

''அவளின் பயணத்திற்கு உதவுவோம்'' - பெண் வேட்பாளர்களுக்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் மீதான அத்துமீறல்களை தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் அத்துமீறல்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

 

வன்முறைகள், ஒடுக்கு முறைகள், நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் என்பனவற்றை சமூக ஊடகங்கள் ஊடாக பெண் வேட்பாளர்கள் எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

இவற்றுக்கு எதிராக சில தரப்பினரின் உதவியுடன் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

''அவளின் பயணத்திற்கு உதவுவோம்'' எனும் பெயரில் முன்னெடுக்கப்படுகின்றது.

views

29 Views

Comments

arrow-up