வவுனியா - ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கி பெண் கொலை

வவுனியா - ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அயல்வீட்டைச் சேர்ந்த ஒருவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த 58 வயதான பெண், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறே கொலைக்கான காரணம் எனவும்
குற்றத்துடன் தொடர்புடைய நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
123 Views
Comments