ஆறாவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் யாழ்ப்பாணம் ஃபொக்ஸ் ரிசோர்ட்ஸ்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
23

ஆறாவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் யாழ்ப்பாணம் ஃபொக்ஸ் ரிசோர்ட்ஸ்

ஆறாவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் யாழ்ப்பாணம் ஃபொக்ஸ் ரிசோர்ட்ஸ்

கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் கீழ் செயற்படுகின்ற யாழ்ப்பாணம் ஃபொக்ஸ் ரிசோர்ட்ஸ் (Fox Resorts-Fox Jaffna) ஆறாவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகின்றது.

 

யாழ்ப்பாணம் கொக்குவிலிலுள்ள ஃபொக்ஸ் ரிசோர்ட்ஸ்  சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கின்ற அனைத்து வசதிகளையும் கொண்டஹோட்டல் கட்டமைப்பாக திகழ்கின்றது.

 

இயற்கைச் சூழல், நீச்சல் தடாகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தன்னகத்தே கொண்ட  ஃபொக்ஸ் ரிசோர்ட்ஸ், யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவு வகைகள் உள்ளிட்ட ஏனைய அனைத்து உணவு வகைகளையும் தனித்துவமாக பெற்றுக்கொள்ளக்கூடிய ஹோட்டலாகவும் விளங்குகின்றது. 

 

உள்நாட்டு, வௌிநாட்டு விருந்தினர்களுக்கு சிறந்த விருந்தோம்பலை வழங்குகின்ற ஃபொக்ஸ் ரிசோட்ஸ், 2020 ஆம் ஆண்டு தெற்காசியாவின் மிகச்சிறந்த மரபுரிமை ஹோட்டலுக்கான SATA விருதினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

 

ஃபொக்ஸ் ரிசோர்ட்ஸின் ஆறாவது  பூர்த்தியை முன்னிட்டு சர்வமத அனுஷ்டானங்களும் இன்று காலை நடைபெற்றன. 

 

ஃபொக்ஸ் ரிசோட்டின் பிரதம  நிறைவேற்று அதிகாரி Chris Quyn  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் ஃபொக்ஸ் ரிசோர்ட்ஸ் ஊழியர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

views

205 Views

Comments

arrow-up