அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலை கழுகு அறிவிப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
DEC
26

அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலை கழுகு அறிவிப்பு

அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலை கழுகு அறிவிப்பு

அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலை கழுகு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்க காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.

 

நத்தார் தினமான நேற்று(25) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறித்த ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

 

அமெரிக்காவின் கடந்த 250 வருடங்கள் கொண்ட வரலாற்றில் "வெண்தலை கழுகு" மிக இன்றியமையாததாகும்.

 

1782ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் அரச இலட்சனைகளில் "வெண்தலை கழுகு" பயன்படுத்தப்பட்டு வந்தாலும் தேசியப் பறவையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை.

 

எவ்வாறாயினும், 1940ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் வெண்தலை கழுகை விற்பனை செய்வதோ அல்லது வேட்டையாடுவதோ சட்டவிரோதமானதென அறிவிக்கப்பட்டது.

 

அத்துடன், அமெரிக்காவின் உத்தியோகபூர்வ ஆவணங்கள், நாணயம், கொடிகள், இராணுவ சின்னம் உள்ளிட்ட பலவற்றில் இந்த வெண்தலை கழுகு இடம்பெற்றுள்ளது.

 

வட அமெரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கழுகின் தலைப்பகுதி வெள்ளை நிறமாகும்.

 

வெண்தலை கழுகு அமெரிக்காவில் சக்தி மற்றும் வலிமையின் அடையாளமாக கருதப்படுகிறது.

 

ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கிய மூத்த தலைவர்களுள் ஒருவரான பெஞ்சமின் பிராங்கிளின், வெண்தலை கழுகுகள் மோசமான சில குணங்களை கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டி அதனை தேசிய பறவையாக அறிவிப்பதற்கு எதிர்ப்பை தெரிவித்தார்.

 

ஆனால், அவரின் இந்த கருத்தை ஏனைய தலைவர்கள் ஏற்றிருக்கவில்லை.

 

வலிமை, தைரியம், சுதந்திரம் மற்றும் அழியாத தன்மை ஆகியவற்றின் அடையாளமாக கழுகுகளை சுட்டிக்காட்டினாலும் இந்த வெண்தலை கழுகு வட அமெரிக்காவை மட்டுமே பூர்வீகமாக கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

views

121 Views

Comments

arrow-up