வவுனியாவில் இடம்பெற்ற தேசியமக்கள் சக்தியின் பிரச்சாரக்கூட்டம்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமாரதிசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) பிரச்சாரக்கூட்டம் வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரச்சாரக்கூட்டமானது வவுனியா குருமன்காட்டில் (Kurumankadu ) இன்று (5) காலை இடம்பெற்றுள்ளது.
மக்கள்விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் உபாலி தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமாரதிசாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றயிருந்தார்.
இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இம்மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்கள் சூடுப்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
146 Views
Comments