ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை நாளை(04) முதல் மீள ஆரம்பம் - பரீட்சை திணைக்களம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
DEC
05

ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை நாளை(04) முதல் மீள ஆரம்பம் - பரீட்சை திணைக்களம்

ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை நாளை(04) முதல் மீள ஆரம்பம் - பரீட்சை திணைக்களம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை(04) முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

பலத்த மழையுடனான வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளால் உயர்தரப் பரீட்சை இரண்டு சந்தர்ப்பங்களில் ஒத்திவைக்கப்பட்டது.

 

இந்தநிலையில் நாளை(04) முதல் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள கால அட்டவணைக்கு அமைய பரீட்சை நடத்தப்படும் என பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார்.

 

அதற்கமைய, ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா இன்று(03) நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

 

போக்குவரத்து சிக்கல்களால் தமக்கான பரீட்சை நிலையத்திற்கு செல்ல முடியாதுள்ள பரீட்சார்த்திகளுக்கு அருகிலுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

views

90 Views

Comments

arrow-up