தனிஷ்க விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
09

தனிஷ்க விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன..

தனிஷ்க விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன..

இலங்கை கிரிக்கெட் வீரர் தனிஷ்க குணதிலக்க தொடர்பான வழக்கின் உண்மைகளை வெளியிட ஊடகங்களுக்கு சிட்னி நீதவான் இன்று அனுமதி வழங்கியுள்ளார்.

 

சிட்னி மோர்னிங் ஹெரால்ட் நாளிதழின் படி, ஊடகங்களுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பான தகவல்களை வெளியிடுவதைத் தடுக்கும் உத்தரவு, நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டின் பின்னர், சிட்னி நீதவானால் இன்று (09) வழங்கப்பட்டது.

 

அனுமதியின்றி உடலுறவு கொண்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனிஷ்க குணதிலக்க இன்று (09) காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

 

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட தனிஷ்க பாலியல் வன்கொடுமை செய்தபோது பலமுறை தனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஆவணங்களில் தெரியவந்துள்ளது.

 

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில், தனிஷ்க வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டதாகவும், அதன் போது 20-30 வினாடிகள் கழுத்தில் ஒரு கையை வைத்து கழுத்தை நெரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

குற்றம் சாட்டப்பட்ட தனிஷ்க மேலும் 2 முறைகள் குறித்த பெண்ணின் கழுத்தை நெரித்ததாகவும், மூன்றாவது முறை, குற்றம் சாட்டப்பட்டவர் ஆறு வினாடிகளுக்கு அவரது சுவாசத்தை கட்டுப்படுத்தியதாகவும் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது மணிக்கட்டை தவறாகப் பிடித்ததாகவும், ஆனால் அவரது கையை தனது மணிக்கட்டில் இருந்து அகற்ற முயன்றதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டினார், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் மேலும் 10 வினாடிகள் கழுத்தில் கையை இறுக்கமாகப் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்வதற்கு சம்மதிக்கவில்லை என்று கூறும் புகார்தாரர், மூச்சுத்திணறல் சம்பந்தப்பட்ட உடலுறவுக்கு சம்மதிக்கவில்லை என்று கூறியுள்ளதாகவும் சிட்னி மார்னிங் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, நியூ சவுத் வேல்ஸ் பொலிஸாரின் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட பெண் தொடர்புடைய சம்பவத்தின் பின்னர் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், அங்கு அவருக்கு பாலியல் மருத்துவப் பரிசோதனை மற்றும் மூளை ஸ்கேன் செய்யப்பட்டதாகவும் அந்த ஊடகச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

 

இருப்பினும், பொலிஸ் தகவல்களின்படி, இவர்கள் இதற்கு முன் அறிமுகமற்றவர்கள், மேலும் நவம்பர் 2 ஆம் திகதி சிட்னியில் உள்ள ஓபரா பாரில் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்வதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்ட தனிஷ்க குறித்த பெண்ணை பிரிஸ்பேனுக்கு வரும்படி ஊக்குவித்ததாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் கூறுகிறது.

 

மேலும், இவர்கள் சுமார் அரை மணி நேரம் பாரில் தங்கி, மது அருந்திவிட்டு இரவு உணவிற்குச் சென்றுவிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு திரும்ப டாக்ஸிக்காக காத்திருந்தனர், அப்போது குற்றம் சாட்டப்பட்ட தனிஷ்க பாதிக்கப்பட்ட பெண்ணை தகாத முறையில் தொட்டுள்ளார். என்று சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

 

எனினும், பிரதிவாதியான தனிஷ்க சார்பில் கடந்த திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி ஆனந்த அமர்நாத், வழக்கிலிருந்து விலகியதையடுத்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம், தனிஷ்கவின் சார்பில் வாதாடும் பொறுப்பை வேறொரு சட்டத்தரணியிடம் ஒப்படைத்துள்ளது.

 

இதேவேளை, இன்றைய விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட வீரரின் சார்பில், பாதுகாப்பு சட்டத்தரணி சாம் பரராஜசிங்கம் மற்றும் சட்டத்தரணி சாரா பிளாக் ஆகியோர் ஆஜராகியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) காலை உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் 12 சுற்றில் வெளியேறிய இலங்கை அணி நாடு திரும்புவதற்கு முன்னதாக தனிஷ்க குணதிலக்க மீது நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

 

இச்சம்பவம் தொடர்பாக, டவுனிங் சென்டர் பிராந்திய நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை (07) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், பிரதிவாதியான தனிஷ்கவுக்கு பிணை மறுக்கப்பட்டது.

 

அதன்படி, தனிஷ்க குணதிலக்க சிட்னியில் உள்ள சில்வர் வாட்டர் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டு, தற்போது 10 நாள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.

 

அடுத்த வருடம் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அதற்கு முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தனிஷ்க சார்பில் பிணை விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


 

views

119 Views

Comments

arrow-up